காஞ்சி சங்கராச்சாரியார் அருளாசியுடன் மலர்ந்துள்ளது மலர்வனம் தீபாவளி சிறப்பிதழ். விதம் விதமான சிறுகதைகள், அனுபவ கட்டுரைகளுடன் மலர்ந்துள்ளது. சிரித்து மகிழ தமாசு துணுக்குகளும் உண்டு.
பிரபல திரைப்பட இயக்குனர் பாலசந்தருடன் பழகிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் மோகன். நெகிழ்வான சம்பவங்கள் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளன. லண்டனில் தீபாவளி என்ற தலைப்பில் சிறுகதை ஒன்று சுவை கூட்டுகிறது. பிரபல கர்நாடகஇசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து கட்டுரை அமைந்து சிறப்பு சேர்க்கிறது.
தலைத் தீபாவளியும், தீ விபத்தும் என உருக்கமான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்வா உபதேசம் என்ற தலைப்பில் நகைச்சுவை கதை ஒன்று உள்ளது. படித்து, ரசித்து சிரித்து மகிழும் வகையில் உள்ளது மலர்வனம்.
– வேந்தன்