அருமண் உலோக தனிமங்களை அறிமுகம் செய்யும் நுால். வேதியியல் இயல்புகள், பயன்பாட்டு பற்றி தெளிவான விபரங்கள் உள்ளன.
லாந்தனம் முதல் லுடீசியம் வரை, 15 தனிமங்கள் மற்றும் ஸ்காண்டியம், இட்ரியம் பயன்பாடு பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பூமி பரப்பில் இவற்றின் இருப்பு விபரம் கூறப்பட்டுள்ளது. கனிமங்களில் இருந்து பிரித்து எடுப்பதில் உள்ள சிரமங்களை உரைக்கிறது.
கணினி திரை, அலைபேசி கருவி, சி.எல்.எப்., பல்பு, வெல்டிங் தொழில் உட்பட இந்த தனிமங்களின் பயன்பாடுகளை அறியத்தருகிறது. தனிம வரிசை எண்களுடன் அடர்வு, உருகு மற்றும் கொதிநிலை, கடினத்தன்மை என வேதியியல் பண்புகளை முழுமையாக தந்துள்ள அரிய நுால்.
– ஒளி