படிப்பில் ஏற்படுகிற அழுத்தம், எதிர்காலத்தை பற்றிய சிந்தனை, எதிர்கால வேலைவாய்ப்பு அச்சம் போன்றவையே ரத்த அழுத்தம் ஏற்பட காரணம்.
25 முதல் 50 வயதுக்குட்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உயர் ரத்த அழுத்தத்தால் இதய நோய்கள், கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தால் மார்பு வலி, மாரடைப்பு, இதய தசைகளுக்கு சிதைவு அல்லது அழிவு ஏற்பட்டு, இதய செயல் இழப்பு ஏற்படுகிறது.
ரத்த அழுத்த தாக்கத்தால், 60 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை சந்திக்கும் விகிதம் அதிகமாகிறது. பெண்களில், 40 வயது கடந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு சாதாரணமாகக் காணப்படுகிறது.
குழந்தைக்கு சிறுநீரக ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால், ரத்த அழுத்தம் வரலாம். ரத்த அழுத்தம்ஏற்படாமல் தடுக்க, காலை எலுமிச்சை சாறு, இஞ்சி, தேனும் கலந்து சாப்பிடலாம். வெள்ளரி,நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை சாப்பிடலாம்.
எடையை குறைக்க உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். மது அருந்த வேண்டாம். புகையிலையை தவிர்க்க வேண்டும். இதுபோன்று கைக்குழந்தைகள், இளவயதினர், கருவுற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கு ஏற்படும் பிரச்னைகள் விவரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணங்களும், சிகிச்சை முறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் டாக்டர் எஸ்.அர்த்தநாரி நீண்டகால அனுபவ அடிப்படையில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
-– இளங்கோவன்