நாடி ஜோதிடம் – ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, நாடி ஜோதிடம் பற்றிய பல்வேறு விளக்கங்களை, உண்மைகளைக் கூறும் நுால்.
நாடி ஜோதிடம் என்றால் என்ன, கைரேகையின் பயன்பாடு, நாடி ஜோதிட ரகசியங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜீவநாடி குறித்த தகவல்கள் மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. சிலரது நாடி ஜோதிட அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா? சிலருக்கு மட்டும் நாடி ஜோதிடம் பலிப்பதும், சிலருக்கு பலிக்காமல் போவதும் ஏன், நாடி ஜோதிடப் பரிகாரங்கள் ஏன் என்பதையும், வைத்தீஸ்வரன் கோவில் நாடிகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ள நுால்.
–- பி.எஸ்.என்.,