தேவகோட்டை பள்ளி மாணவர்களின், பல்துறை ஆற்றலை எடுத்துக்காட்டும் நுால்.
இந்த பள்ளியில் கற்று புகழ்பெற்றுள்ள 25 பேரை அறிமுகம் செய்கிறது. அது போல், தற்போது படிப்போரில் பல்துறையிலும் கவனம் செலுத்தும் 25 பேர் பற்றி, ‘நாளைய நம்பிக்கை’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளரும் தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
இலக்கியம், கலைகள், மேடைப்பேச்சு, குறும்படம் தயாரிப்பு, அரசியல் போன்ற துறைகளில் மிளிர்ந்து வரும் பழைய மாணவர் பட்டியல், ‘அடடா’ போட வைக்கிறது. திறன்களால் விளங்குவதை சொல்கிறது. புத்தகத்தை புரட்டினால், மேலோங்கும் எண்ணம் வந்துவிடும். நம்பிக்கை ஏற்படுத்தும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்