பிறப்பால் மனிதர்கள் சமம் என்ற கொள்கையுடன் செயல்பட்ட ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நுால். புத்தகங்களை படித்து அறிவை வளர்த்தது பற்றி அழுத்தமாக தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் நடந்த அடிமை வியாபாரத்தை கண்டு, லிங்கன் மனதில் எழுந்த மாற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறது. எதிர்ப்புகளை சமாளித்து, கடும் உழைப்பால் முன்னேறும் சாதுரியம் பற்றி குறிப்பிடுகிறது.
அமெரிக்க அதிபராக வெற்றி வாகை சூடியது, அடிமை முறை ஒழிப்பை மனதில் கொண்டு நிறைவேற்றியது என, அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. சம்பவங்களுடன் உரிய வரைபடங்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுஉள்ளன. வரலாற்றில் ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய அரும்பணி, பெருமைகளை பட்டியலிடும் நுால்.
– ஒளி