தோல்வி கண்டு அஞ்சாமல் துள்ளி எழ வேண்டும் என்ற நீதியை போதிக்கும் கவிதைகளின் தொகுப்பு புத்தகம்.
சமூகநீதியை போதிக்கும் பாடல்கள், காதல் சுவை சொட்டும் பாடல்கள், தலைவர்களைப் போற்றும் பாடல்கள் என நிறையவும், நிறைவாகவும் உள்ளன. புயல் வீசுவதால் ஏற்படும் கொடுமையை நுட்பமாக வர்ணிக்கிறது. வயல், மரம், குடிசை வீடுகள் சிதைவதை வர்ணிக்கும் வரிகள், கண்களில் நீர் ததும்பச் செய்கிறது.
தொழிலாளர் வேதனையை, ‘வியர்வையின் முகவரி’ என்ற பாடல் சொல்கிறது. மரம் என்று ஏன் பெயர் வந்தது என்பதற்கு சொல்லும் விளக்கம் அருமை. மண்ணை மருவி முளைப்பதால், அது மரமானதாம். காதலையும், வானவில்லையும் ஒன்றுபடுத்தி பாடியுள்ளதும் சிறப்பாக உள்ளது. இனிய பாடல்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்