உடைமை, இறைமை, கடமை, நேர்மை போன்ற தலைப்புகளில் வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தரும் நுால்.
பஞ்சபூதங்களின் சேர்க்கை தான் உயிரினங்கள் என்பதை படங்களுடன் சித்தரித்துள்ளது. இறை வழிபாடு அறிவியலுடன் தொடர்புள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ் மொழிக்கும், தஞ்சை கோவிலுக்கும் உள்ள தொடர்பு சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
முக்குணம், மூன்று வினை, மும்மலம் என்பதற்கு பொருள் தந்து, எண்ணம், செயல், சொல்லில் மேலோங்குவதை உணர்த்துகிறது. எளிமையில் நாட்டமே ஆசையை குறைக்கும் என விளக்குகிறது. அகம், புறத்துாய்மை, ஒழுக்கத்தின் மேன்மையை கற்பித்து வாழ்வை மேம்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்