வெள்ளையருக்கு எதிராக, வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் காட்டிய வீர, தீர பராக்கிரமங்களை விவரிக்கும் நாடக நுால். இந்திய விடுதலைப் போர் நிகழ்வு சீரிய நடையில் காட்சிகளாக ஆக்கப்பட்டுள்ளது.
உணர்ச்சிப் பிழம்பாக உருக்கொண்டுள்ள வரலாற்று நாடகம். ஜான்சி ராணி லட்சுமிபாயின் திருமணம் துவங்கி, டல்கவுசி பிரபு முன் நீதி கேட்டு நெடிய உரை ஆற்றியது வரை உள்ளது. காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அருமையாக அமைக்கப்பட்டு உள்ளன.
கதை மாந்தர் வேடத்திற்கு ஏற்ப அளவாகவும், தெளிவாகவும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்ச கல்யாணி குதிரையின் தனிச்சிறப்பு என்ன என்பதை அறியத்தருகிறது. தேசபக்தியை வளர்க்க உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்