திருக்குறள் அரங்கேற்றத்தை கற்பனையாக நாடக வடிவில் அமைத்துள்ள நுால். மேடையில் காண்பது போல் சுவையான காட்சிகளாய் அமைந்துள்ளன.
உலகம், குறள் கருத்துகளை இப்போது ஏற்றுள்ளது. அது அரங்கேறிய காலத்தில் நிராகரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த தடைகளுக்கு, குறள் வழியாகவே விடை கொடுக்கப்பட்டுள்ளது.
விருந்தோம்பல், வாசுகியுடன் வள்ளுவர் பேசும் காட்சிகள் சிறப்பாக உள்ளன. வைகைக் கரையில் நக்கீரரின் கேள்விகளுக்கு, குறள் வழியாக பதில் சொல்வது போல் காட்சிகள் உள்ளன. வான்குரல், வள்ளுவத்தை ஏற்று வாழ்த்துவது போல் உள்ளது. குறள் அரங்கேற்றத்தை கற்பனை கலந்து நாடகமாய் தந்துள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்