ஜோதிடத்தில், ஜாதகத்தை கொண்டு பலன் கூறும் நுட்பமுறை கணிதங்களை கற்றுத் தரும் நுால்.
அட்ட வர்க்கக் கணித பலன்களை விளக்குகிறது. ஒரு ஜோடி ராசி இரண்டில் ஏதாவது ஒன்றில் கோள்கள் இருந்து, மற்றொன்றில் இல்லாவிடில் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றி உள்ளன. ராசி, பாகை, கலையுடன் கூடிய கோள்களின் பாதசாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில், பலன் சொல்ல விரும்பும் ஜோதிடர்கள், ரஸ்மியோகக் கணிதமுறைக்கு முதலிடம் தர வேண்டும் என்கிறது. நட்சத்திரங்களின் ராசி, பாகை, கலை பட்டியல் பின்னிணைப்பாக உள்ளது. புத்திரப் பேறு கணிப்பு முறை கூறப்பட்டுள்ளது.
ஜோதிடம் கூறுவோருக்கு உதவும் நுால்.
-முனைவர் கலியன் சம்பத்து