ஆரியம், திராவிடம் குறித்த வரலாற்றுக் கருத்துகளை விவாதிக்கும் நுால்.
திராவிடக் கோட்பாட்டை பின்பற்றும் அரசியல் கட்சிகளால் சமூகத்தில் எதிர்விளைவுகள் ஏற்பட்டதாக கருத்தை பதிவு செய்துள்ளது.
திராவிட அரசியலால் கல்வியறிவும், சமூக எழுச்சியும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வருவதை விமர்சிக்கிறது. நீதிக்கட்சியின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டிச் சமூகநீதிக் கோட்பாடுகளை விமர்சிக்கிறது.
வேதகாலம், சமஸ்கிருத சிறப்புகள், வருணாசிரம தர்மம் என கருத்தோட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வருணப் பிரிவு இயல்பானதாகவும், தொழில் அடிப்படையில் மாறுவதாகவும் சித்தரிக்கிறது.
தமிழக அரசியல் விழிப்புணர்வு, கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு