மாணவர்களுக்கு சிந்தனைப் பொறியை பற்ற வைக்கும் வகையிலான நுால்.
கூட்டுக்குடும்ப பபூன் குரங்குகள்; சிரிக்கும் புறாக்கள்; வலிக்காத ஊசிகள்; வேட்டைக்குப் பயன்படும் தவளைகள், பூச்சிகள் எப்படி மூச்சு விடுகின்றன போன்ற அரிய செய்திகளை உடையது. இரும்பு ஏன் துருப்பிடிக்கிறது; கழுகை விரட்டும் மீன்கொத்தி பறவை; பறக்கும் மீன்கள்; மரத்தில் கிடைக்கும் மீத்தேன் போன்ற தலைப்புகளில் வியப்பூட்டுகிறது.
இதுவரை கேள்விப்படாத பறவை, விலங்கு, பூச்சிகள் பற்றிய ஆச்சரிய அறிவியல் தகவல்கள் தரப்பட்டுள்ளன. எளிய நடையில் திரில்லான உணர்வுடன் வாசிக்க முடிகிறது. ஆசிரியர், மாணவர் என அனைத்து தரப்பும் படிக்க வேண்டிய நுால்.
–- இளங்கோவன்