மரபுக்கு உட்பட்டு எளிய நடையில் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
தமிழர் வாழ்க்கையில், ‘நுழைவுத் தேர்வு வேண்டாம்; மீனவர் உரிமை காப்போம்’ என்பதுபோல், போராட்டம் நடத்தி வாழ வேண்டிய நிலையை எடுத்துரைக்கிறது. விவசாயம் இல்லை என்றால் உயிரினங்களுக்கு உணவு இல்லை. இந்த உண்மையை எடுத்துக்கூறி தஞ்சை மண்ணின் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை வெளிப்படுத்துகிறது.
புதிய ஆத்திசூடியை 13 அடிகளில் அமைத்து காட்டுகிறது. அறிவைப் பெருக்கி, சிக்கல்களை விடுவிக்க கேட்கிறது. சங்கங்கள் எண்ணிக்கை பெருகி வருவதால் மக்களிடையே ஒற்றுமை சிதறி வருவதாக சுட்டிக்காட்டுகிறது. அழகுணர்வுடன் உரிமை கேட்கும் கவிதை தொகுப்பு நுால்.
– முகிலை ராசபாண்டியன்