பெண்ணியக் கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கும் மொழிபெயர்ப்புக் கவிதை நுால்.
பெண்களை ஏலம் விடும் செயலியை உருவாக்குகிறான் மாணவன். அதை எதிர்க்கும் வகையில் கவிதைகள் எழுதி தொகுக்கப்பட்டிருக்கிறது. உண்மை, விருப்பு வெறுப்பு, உணர்வு, ஆதங்கம், சந்தோஷம், துயரத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்கிறது.
வார்த்தைகளில் ஒளிரும் உண்மை கவனத்தை ஈர்க்கிறது. தாய்மொழி குறித்தான கவிதையில் உணர்ச்சி ததும்பி வழிகிறது. அப்படியே கடைசி வரை நீடிக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளன. துணிச்சல் மிக்க வகையில் எழுதப்பட்ட தோட்டா கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு