புறப்பொருள் சார்ந்த சிந்தனைகளை எடுத்துக் கூறும் கவிதை நுால். ஒற்றுமையுடன் கை கோர்க்க வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்துகிறது.
நாடுகள் போர் தொடுப்பதை விட்டு, பூங்கொத்து வழங்கி, நட்பை மலரச் செய்ய வழிகாட்டுகிறது. வரலாறு, நாட்டுப்பற்று, அறிவியல், தகவல் தொழில்நுட்பம் என பல கோணங்களில் வளர்ச்சிக்கு விளக்கம் தருகிறது.
குடிநீர் பற்றாக்குறையை போக்க, இமயம் முதல் குமரி வரை நதிகளை இணைக்க வேண்டடியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நீர் வளத்தைப் பாதுகாக்கவும், தேச ஒற்றுமை பேணவும் உறுதி ஏற்க கூறுகிறது. இருள் நீக்கி, அறியாமை போக்கி அன்பை, அறிவை வளர்க்க வேண்டும் என்கிறது. எளிய நடையில் அமைந்த நுால்.
– புலவர் ரா.நாராயணன்