புகழ்பெற்ற இசை மேதைகள் உருவாக்கிய பாடல்களின் தொகுப்பு நுால். இசையில் பயிற்சி பெற விரும்புவோர் திறனை வளர்க்க உதவும்.
இசை உலகுக்கு தொண்டாற்றியோர், கொங்கு மண்டல வித்வான்களை நன்றியுடன் அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து, விநாயகர், சிவன், முருகன், பெருமாள், அம்பாள் தெய்வங்களை போற்றும் பிரபல இசைப்பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
ஸ்லோகங்கள் மற்றும் அருணகிரிநாதர் திருப்புகழும் இந்நுாலில் உள்ளன. பாடி பழக வசதியாக ராகம், தாளம் மற்றும் படைத்தவர் விபரங்களுடன் உள்ளது. தமிழ், ஆங்கில மொழி அறிந்தோர், பதம் பிரித்து பயிற்சி அளிக்க ஏற்ற வகையில் உள்ளது. வெளி மாநிலம், வெளிநாடுகளில் இசையை கற்பித்து, பயிற்சி அளிப்போருக்கு பயன்படும் நுால்.
– ராம்