சந்தநயம் பெருக்கெடுத்து மனதில் பதிய வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால்.
செய்யுள், புதுக்கவிதை, திரைப்பட பாடல்களில் ஓசை நயம் முக்கியம் என்பதை சுட்டுகிறது. மோனை, எதுகை, இயைபு, முரண்களை அமைப்பதால் இது உருவாக்கப்படுவதை காட்டுகிறது. அவ்வகையில், 2,022 பாடல்கள் புனையப்பட்டுள்ளன.
சுவையுடன், ‘பயணத்தில் விழித்திரு; பயத்தை ஒழித்திரு; பண்பற்றதைக் கழித்திரு: பயிராய் செழித்திரு’ என்பது போல் அமைந்துள்ளன. அது போல், ‘அனைத்து நதிகளையும் இணைப்போம்; அவரவர் நாட்டையும் பிணைப்போம்; அகிலமும் ஒன்றென அணைப்போம்; அமைதி ஆற்றில் நனைப்போம்’ என முகங்காட்டுகிறது. கன்னித்தமிழ் கவிதைகளால் சுவையூட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்