ஆன்மிக தத்துவச்சாரத்தை கரும்புச்சாறாக பிழிந்து எளிய நடையில் தரும் நுால். சைவம், வைணவம், சாக்தம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. வர்ணம், ஜாதி என்பது வேறு வேறு என விவரித்துள்ளது. விவேகானந்தர் பொன்மொழிகள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.
ஆன்மிக தத்துவம், ‘உடலே ஆலயம் உள்ளம் தான் கோவில்’ என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மனதில் ஆசை இருக்கும் வரை மந்திரமும், தியானமும் மனிதனை மனிதனாக்க முடியாது என்கிறது. பிரம்மம் என்ற ஆனந்தத்தை அடைய வழிகள் சொல்லப்பட்டு உள்ளன. வேதனையில் இருந்து விடுதலை பெறுவது தான் மகிழ்ச்சி. பக்தியை புரிய வைக்கும் புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்