குழந்தைகள் மனதில் பதியும் வண்ணம், பாடங்களை பாடல்கள் வழியாக சொல்லும் புத்தகம்.
பெயரை குறிக்கும் சொல் எல்லாம் பெயர்ச்சொல் ஆனது. செயலை குறிக்கும் சொல் எல்லாம் வினைச்சொல் ஆனது. குறுகிய ஓசை உடையது குற்றியலுகரம்.
தெற்கில் வீசுவது தென்றல். வடக்கில் வீசுவது வாடை. கிழக்கில் வீசுவது கொண்டல். மேற்கில் வீசுவது கோடை என எளிமையாக கற்றுத் தருகிறது.
தன்னை ஆதரித்த வள்ளலை, கம்பர் பாடியுள்ளதை சிறப்பாக பதிவு செய்து வழங்கும் தன்மையை போற்றுகிறது. பக்கத்தையும் பக்கத்தையும் பெருக்கினால் சதுரத்தின் பரப்பு கிடைக்கும். இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திச்சாறு இயற்கை உணவாகும். இதுபோல மழலையருக்கு கருத்து புகட்டும் புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்