தத்துவக் கருத்துகள் மனதில் பதியும் வகையில் உதாரணங்களோடு எடுத்துரைக்கும் நுால்.
எந்த செயலையும் துவங்கும் முன், திட்டம் தீட்டிக்கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை விளக்குகிறது. செயலைப் பற்றிய முழு அறிவு, செய்து முடிக்கும் மனத் தெளிவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது. உணர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன், சாதிக்கத் துடிப்போருக்கு பால பாடமாக அமைகிறது.
மனத் தளர்ச்சியும், வெறுப்புணர்வும் சாதனைக்கு தடை என்பதால், வெகு கவனமாக பலம், பலவீனத்தை சரி பார்த்துக் கொள்ள வலியுறுத்துகிறது. லட்சியத்தை அடைய வேண்டும் என்ற வேகம், மனதில் எப்போதும் இருக்க வேண்டும். அப்போது தான் தடைகளை தாண்டி சாதிக்க முடியும் என தன்னம்பிக்கை ஊட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்