வெற்றிக்கான சூத்திரங்களை கூறி வழிகாட்டும் நுால். வாழ்வில் முன்னேற எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை கற்றுத்தருகிறது.
ஒரு முழு ஆண்டை கணக்கிட்டு, ஒவ்வொரு நாளைக்கும் உரிய படிப்பினைகள், பாடங்களாக சொல்லப்பட்டுள்ளன. இந்த சூத்திரங்களை மனதில் ஏற்று செயல்படுத்தினால், வாழ்வில் மாற்றம் நடப்பது நிச்சயம் என உறுதி தருகிறது. வெற்றி இலக்கை அடைவது எளிதாகும் என்கிறது.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம் என்பது தத்துவம்; அதை செயல்படுத்தும் வழிமுறைகளை வகுத்து தருகிறது. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய அட்டவணையை தருகிறது. அதில் முன்னேற்ற குறிப்புகளை அன்றாடம் எழுத ஊக்குவிக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேற வழிகாட்டும் புத்தகம்.
– ராம்