பங்குச்சந்தை பற்றி அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் தகவல்களை தொகுத்துத் தந்துள்ள நுால்.
ஷேர் மார்க்கெட் எவ்வாறு செயல்படுகிறது, பங்கு எவ்வாறு விற்பனைக்கு வருகிறது, எவ்வாறு வாங்க வேண்டும், என்னென்ன அளவுகோல்களுடன் அணுக வேண்டும் என எளிமையாக தருகிறது. பங்கு வர்த்தகம் சூதாட்டமா என்ற கேள்வியை முன்வைத்து அலசுகிறது.
ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி கையாள்வது, ஏற்ற இறக்கங்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என தெளிவுபடுத்துகிறது. பங்குகளில் முதலீடு செய்து வருமானம் பெருக்க நம்பிக்கை ஏற்படுத்தும் நுால்.
– ஊஞ்சல் பிரபு