காவடிச்சிந்து வடிவில், கன்னல் தமிழிலே, கற்கண்டுக் கட்டிகளாய், கவிதைகளை அள்ளித் தெளித்துள்ள நுால்.
தமிழ் மொழியின் சிறப்பை, ‘கண்டவர் இல்லை அதன் பிறப்பு பார் சொல்லுமே அதனுடைய சிறப்பு, கண்முன் எங்கும் வழங்கி வரும் மொழிகள் அனைத்தையுமே வெல்லும் உடன்கொல்லும்’ என உரைக்கிறது.
திருவள்ளுவர், கண்ணகி மீது கவிதைகள் பாடப்பட்டுள்ளன. வண்ணக் கலவை தோற்றத்தில் வார்த்தைகளை குவியலாக்கியுள்ளது. கம்பர் கதை சொல்லும் பாணியை, மனதில் பதிய வைத்து கவித்துவத்திற்கு முத்தாய்ப்பு கூறுகிறது. பாரதியை பாடும்போது வார்த்தைகள் கைகட்டி நிற்கின்றன. பன்னிரு திருமுறைகள், சமயக்குரவர் நால்வர் என பல்வேறு தலைப்புகளில் கவிதை மழை பொழிந்துள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்