பத்திரிகையில் பணியாற்றிய அனுபவத்தை விவரிக்கும் நுால். நினைவுகளை எழுதுவோர், இறந்த காலத்தை நிகழ்காலத்தில் விதைப்பவர் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக படைக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை துறை என்ற களத்தில் ஒவ்வொருவரும் ஒரு சொல்லாக, எழுத்தாக எப்படி இருந்தனர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. உதவி ஆசிரியராக நுழைந்து பங்களித்த விதம் எவ்வாறு இருந்தது; அந்த வெற்றியின் பின்னணியில் இருந்தோரை விரிவாகக் காட்டுகிறது. ஒரு காலக்கட்டத்தின் ஆவணமாகவும் திகழ்கிறது.
அப்போதைய முதல்வர் துவங்கி, சந்திப்புகளில் காலம் என்ன மாதிரி மாய வித்தைகளை இதழியல் துறையில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகிறது. நினைவுகள் வழியாக பயணிக்கும் நுால்.
– ஊஞ்சல் பிரபு