எண் கணிதத்தை விளக்கும் நுால். மனிதர்களின் இயல்பையும், மனப்போக்கையும் காட்டுவதை கூறுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் பிறந்த நாள் எண்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது.
ஆங்கில எழுத்துகளுக்கு மதிப்பெண் தந்து, ஒருவர் பெயரில் உள்ள எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிட்டு, பலன்களை முன்வைக்கிறது. பெயர் எழுத்துகளில் மாற்றங்கள் செய்வதால் வாழ்க்கை போக்கை மாற்ற முடியும் என்கிறது.
ஒருவருக்கான எண்ணை, விண் கோள்களோடு இணைத்து குணநலன்களையும், குறைபாடுகளை நீக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது. ஒவ்வொரு ஆங்கில மாதத்தில் பிறந்த பிரபலங்கள் பற்றி தொகுத்து தருகிறது. எண் கணிதம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு