கவிதையே, கருத்து விதை, பேசும் ஓவியம், காலக்கண்ணாடி என்று உரைக்கும் நுால். கவிதை ஆனந்தத்தை அள்ளித் தரும்; ஏக்கத்தையும் எதிரொலிக்கும். மண்ணொலி, ஊரொலி, விண்ணொலி என்ற பிரிவுகளில் மரபு நெறி மாறாமல் இதய ஏக்கத்தை பதிவு செய்துள்ளது. மண்ணொலி பகுதியில் தமிழின் மேன்மை பற்றி புனையப்பட்டு உள்ளது. ஊரொலியில் சமுதாய அவலங்கள், வாழ்க்கை நிலை சொல்லப்பட்டுள்ளது.
விண்ணொலியில் பெண்களின் அவல நிலை, குமுறல், பாலியல் வன்முறை, இயற்கையை காக்கும் இனிய வழிகள் சொல்லப்பட்டுள்ளன. உரை எழுதித் தந்து படிக்கும் போதே அமைச்சர்கள் உளறுவதாக இன்றைய அரசியல்வாதி நிலையை படம் பிடிக்கிறது. மனதை நிறைக்கும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்