ஆரோக்கியமான உணவுப்பழக்கம் நீண்ட ஆயுளை கொடுக்கும் என எடுத்துரைக்கும் நுால். சமைத்த உணவுகளால் மனித ஆயுளில் குறைபாடு ஏற்படுவதாக எடுத்துரைக்கிறது. உண்ணாவிரதம் கடைபிடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதாக ஆராய்ந்து உரைக்கிறது. பசிக்காக உண்பதை விடுத்து ருசிக்காக உண்பதால், செரிமானம் ஏற்படாமல் உணவு புளித்து, நச்சாக மாறுவதை விளக்கமாக தருகிறது. பசித்தபின் உண்ணும் பழக்கமே சிறந்தது என எடுத்துரைக்கிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டியதன் அவசியத்தை கூறுகிறது. வயிற்றை சுத்தம் செய்யும் காலக்கெடுவை விதியாக தருகிறது. உண்ணும் உணவு, குடல் பகுதி வழியாக வெளியேறும் வரை நடக்கும் செயல்களை வரைபடத்துடன் விளக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்