பாண்டிய மன்னர் வரலாற்றை ஆராய்ந்து சங்க காலத்தில் அமைத்திருந்த கல்லணைகள் பற்றி தகவல்களை தரும் நுால். கள ஆய்வு செய்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கரிகாற்சோழன் கால கல்லணையின் பொறியியல் நுட்பத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
பாண்டியர் கால நீர்மேலாண்மையை அறிமுகம் செய்கிறது. பண்டைய சமூகக் கட்டமைப்பு, நீர்மேலாண்மை, அணைக் கட்டுமானங்கள் பற்றி அரிய தகவல்களைத் தருகிறது. புதிய ஆற்றுக்கு வாய்க்கால் அமைக்கும்போது கடைபிடிக்கப்பட்ட நில அளவீடுகளை அறியத் தருகிறது.
பழங்கால கல்வெட்டு, விரிவான கள ஆய்வுகள் சான்றுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. செப்பேட்டுக் குறிப்புகள், காலவரிசை என உறுதியான ஆதாரங்களுடன், தமிழர் தொழில்நுட்பத்தை முன்வைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு