தமிழர் பின்பற்றிய மருத்துவமுறையை விவரிக்கும் நுால். உலகில் பல்வேறு மருத்துவ முறைகளையும் ஆராய்ந்து தகவல்களை தருகிறது.
புத்தகம் நான்கு பிரிவாக அமைந்துள்ளது. முதலில், தமிழர் மருத்துவம் தொடர்பான வரலாற்று செய்திகள் தரப்பட்டுள்ளன.
உலக அளவில் மருத்துவம் வளர்ச்சியடைந்த விதம் பின்புலத்துடன் தரப்பட்டுள்ளது. தமிழரின், ‘உணவே மருந்து’ என்ற கருத்தாக்க செய்திகளை முன்வைக்கிறது.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் வட்டார ரீதியாக பின்பற்றிய மருத்துவ நடைமுறைகள், ‘வீட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நடந்த மூலிகை ஆய்வு குறித்தும் தகவல் தரப்பட்டுள்ளது. தமிழரின் மருத்துவ அறிவு மற்றும் நடைமுறையை அறிய உதவும் நுால்.
– ஒளி