பலவகை வணிக கணக்கு முறைகளை அறிமுகப்படுத்தும் நுால்.
வணிக நிறுவனங்களில் கணக்குப் புத்தகம் பராமரிப்பதில் ஒற்றை, இரட்டைப் பதிவு முறை, பழங்கால நடைமுறைகளை விளக்குகிறது. வரவு – செலவுக்கான பகுதிகளை பிரித்து எழுதும் முறையை வரைபடத்துடன் தெளிவாக விளக்குகிறது. மூலதனம், எடுப்பு, கொடுப்பு, கொள்முதல், விற்பனையை கணக்கியல் சொற்களாகக் காட்டுகிறது.
துணைப் பதிவேடுகளை பராமரிப்பது, அவற்றால் விளையும் பயன்களை விளக்குகிறது. வங்கியில் கணக்கு துவங்குவது, பராமரிப்பது, வலைதள வங்கி சேவைகள் பயன்படுத்துவதை தெள்ளத் தெளிவாக்குகிறது. வணிகக் கணக்கு பராமரிப்போர் பயன்கொள்ளும் வகையில் அமைந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்