புதுமை செய்யும் விதமாக படைக்கப்பட்டுள்ள அகராதி நுால். ஆங்கிலச் சொற்களுக்கு உரிய பொருளை, தென் மாநில மொழிகளில் வழங்கி வழிகாட்டுகிறது.
முதன்மையான ஆங்கில சொற்களுக்கு உரிய தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சொற்கள் வரிசையாக வழங்கப்பட்டுள்ளன. மொழி ஆய்வு மேற்கொள்வதற்கு உரிய இணைச்சொல் பட்டியல் தெளிவாக உள்ளது.
ஆங்கில முதன்மை சொற்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் பல மொழி பயிற்சிக்கு உதவும். தென் மாநிலங்களில் பயணம் செய்யும் போது மொழியை புரிந்து தொடர்புகொள்ள பயன்படும். நினைவில் பதிக்கத் தக்க வகையில் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொழியியல் ஒப்பீட்டு ஆய்வுக்கு பயன்படும் அகராதி நுால்.
– முகிலை ராசபாண்டியன்