உளவியல் ரீதியாக மாற்றத்திற்கு வழிமுறைகளை விவரிக்கும் நுால்.
வாழ்க்கையில் பிரச்னையை எதிர்கொள்வோருக்கு கேள்விகளும், தேடலும் இருக்கும். அவற்றுக்கு விடை காணும் பாங்கில் கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன. எளிய கேள்விகளை முன் வைத்து, விடை தரும் பாங்கு சிறப்பாக இருக்கிறது. எல்லா வயதினரும் படிக்க ஏற்றது.
வேதனை தரும் நிகழ்வுகளை மறப்பது எளிதானதல்ல. ஆனால், அவற்றை கடக்கும் நடவடிக்கைகள் என்னென்ன என்று விவரிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பதும், மறப்பதும் எவ்வாறு செயல்படுகிறது? பலனாய் என்ன கிடைக்கிறது என்பதை விளக்கி, செய்வதற்கான நுட்பங்களை வழங்கி இருக்கிறது. வாழ்வில் அமைதியுடன் பயணிக்க ஆர்வமாக இருப்போருக்கு உதவும் வகையிலான நுால்.
– ஊஞ்சல் பிரபு