பக்கங்கள்: 192. வெளியீடு: குமரன் பதிப்பகம்,சென்னை. அன்பே அகிலத்தின் திறவுகோலாக உள்ளது. இதற்கு மாறுபட்டு இருப்பது கோபம். இதனால் ஏற்படக்கூடிய இடையூறுகள் எண்ணற்றவையாக இருக்கின்றன. இந்த நிலையை மாற்றினால் தான் வெற்றி பெற முடியும். கோபத்தை எப்படி குறைப்பது ? கோபம் கொள்ளாமல் நிதானமாக எவ்விதம் செயலாற்றுவது? இந்த விளக்கங்களை ஆசிரியர் பலவிதமான எடுத்துக்காட்டுகளுடனும் வாழ்க்கைச் சம்பவங்களுடனும் தெளிவாக மனதில் பதியும்படி கூறியிருக்கிறார். இந்த உண்மைகளை நடைமுறையில் கடைப்பிடித்தால் கோபப்படாமல் வாழ முடியும். அதன் மூலம் வெற்றியும் பெற இயலும். இதனை எல்லோரும் வாங்கிப்படித்து வாழ்வில் வெற்றியுடன் திகழ வேண்டும் என்ற நோக்கில் வெளியிட்டு ப்பட்டுள்ளது.