புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசண்ட் ரோடு, எழும்பூர், சென்னை-8. (பக்கம்: 296. விலை: )
இந்நூலாசிரியர், கம்ப ராமாயணத்தை வெறும் இலக்கியமாக ரசிக்காது; அதன் கவிதை உத்தியை நூலின் நுட்பத்தை ஆராய்ச்சி செய்துள்ளார். இன்றையக் காலக் கட்டத்திற்கு ஏற்ப, இலக்கியத்தை அறிவியல் முறையில் ஆய்வு செய்த நூலாகத் இது திகழ்கிறது.
இந்த ஆய்வு நூல், படிப்பதற்குச் சுவையாக உள்ளது. காப்பியக் கோட்பாடுகளை விளக்குவது, காப்பியக் கட்டுமானக் கலைத் திறனை விளக்குவது, காப்பியக் கட்டுமான கலைத் திறனில் பிற உத்திகளை விளக்குவது ஆகிய பகுதிகளில் நூலாசிரியரின் புலமைத் திறனை உணர்கிறோம்.கம்பர் தம் காப்பியத்தில் உள்ள துணைக் கதைகள், கிளைக் கதைகள், இணைக் கதைகள் ஆகியவற்றை நூலாசிரியர் விளக்குவது அவரின் ஆய்வின் நுட்பத்தை விளக்குகிறது. (பக்.82-109). கம்பர் பால காண்டத்தில் உவகைச் சுவையும், அயோத்தியா காண்டத்தில் அவலச் சுவையும், ஆரணிய காண்டத்தில் மருட்கைச் சுவையும், கிட்கிந்தா காண்டத்தில் வெகுளிச் சுவையும், சுந்தர காண்டத்தில் அச்சச் சுவையும், யுத்த காண்டத்தில் பெருமிதச் சுவையும் இருப்பதாக நூலாசிரியர் கூறுவதை அனைவரும் ஏற்றுக் கொள்வர் (பக்.209).
நல்ல நூல்; அனைவரும் படித்துப் பயன் அடையலாம்.