முகப்பு » ஆன்மிகம் » சொன்னால் விரோதம்;

சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுகிறேன்

விலைரூ.50

ஆசிரியர் : சாமி.தியாகராசன்

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
தெய்வச் சேக்கிழார் மன்றம், கும்பகோணம் - 612 001. (பக்: 217)

சைவ சமய உலகில் காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த நம்பிக்கை மரபுகளை, சில போலிப் புரட்சியாளர்கள் உடைத்தெறிந்து, ஊர் முழுவதும் வெற்றி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் போலியானவர்கள். ஆழ்ந்த அறிவோ, பரந்த குணமோ இல்லாத விளம்பர வீரர் கள் என்பதைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டும் சமயக் காவல் நூலிது.
இந்நூலில் உலா வரும் விவாதக் களங்கள் இதோ:
* வடமொழியா? தமிழ் மொழியா? சிவபெருமான் பேசிய மொழி எது?
* இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது வடமொழி அர்ச்சனையா? தமிழ் மொழிப் பூசனையா?
* கண்ணப்பரின் அன்புக்கு காளத்தி நாதர் அருள் கொடுத்தார். ஆனால், சிவகோசரியாரின் ஆகம பூசையை கண்டுகொள்ளாமல் ஏன் வெறுத்தார்?
* தமிழில் திருமணத்தை நடத்தி வைக்கும் இன்றைய `தமிழ் புரோகிதர்கள்' திருஞானசம்பந்தரின் `மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்றும் தேவாரத்தையே பாடி நடத்துகின்றனரே இது சரியா?
* ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி நான்கு வேதங்கள் போல, தமிழிலும் நான்மறை இருந்ததா? அது கடல்கோளால் அழிந்ததா?
அருமையான இதுபோன்ற பல எரிமலைக் குழம்பாய் ஓடிவரும் கேள்விகளை எடுத்து, விருப்பு, வெறுப்பின்றி அலசி ஆய்ந்து, ஆற வைத்து, சாம்பலுக்கு அடியிலே மறைந்துள்ள தங்கக் கட்டிகளை எடுத்துக் காட்டுவது போல வாதங்களையும், அதற்கான சரியான விடைகளையும், விடைக்குள் நிற்கும் பல வினாக்களையும் ஆய்ந்து, ஆய்ந்து முடிவில் உண்மையை, யாவரும் ஏற்கும் வண்ணம் துணிவோடு எழுதியுள்ள நூலாசிரியர் சாமி.தியாகராசன் போற்றத்தக்க நீதிபதி ஆவார். அவரது எழுதுகோல் சுத்தியல், சரியான தீர்ப்பையே இந்த நூலில் நெத்தியில் அடித்து எழுதியுள்ளது.
நூலாசிரியர் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் `வாணிகப் புலவர்' பலரின் வீண் வாதங்களை எடுத்துக் கூறி, இனி அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி எழுதி, தமிழை அவர்களிடமிருந்து மீட்டுள்ளார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மாணவர் இந்த நூலாசிரியர் என்பதால், பகுத்தறிவுச் சைவமும், ஜாதி மறுப்புச் சமயமும், தமிழ்மறைகளைக் கட்டிக் காக்கும் பொறுப்பும் இந்த நூலில் விரிவாகத் தெரிகிறது.
காசியில் சிவலிங்கத்தை நாமே தொட்டு மலரிட்டு மஞ்சனம் ஆட்டுவதை யாவரும் போற்றும் வகையில் இங்கு திருப்பனந்தாள் ஆதீன கர்த்தர் தற்போது மதுரையிலும் செய்துள்ளார் என்பதைப் படிக்கும் போது, இவர் எந்தப் பக்கமும் சாயாத அந்தக்கால தராசு முள் என்பது தெரிகிறது.
`மரணமுற்ற பின் மறுஉலகில் நல்ல கதியுடம் வாழ்க எனும் கருத்தமைந்த `மண்ணில் நல்ல வண்ணம்' என்ற சம்பந்தர் தேவாரம் பாடி, இன்று தாலி கட்டச் செய்வது எந்த அளவு தமிழ் புரோகிதர்களின் அவல நிலை என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
வடமொழியையும், அந்தணரையும் விடாது துரத்தி வசைபாடும் கூட்டத்தையும், கோவிலைத் தன் குடும்ப வரு
மானக் கோட்டமாகக் கொண்டு, தமிழை யே வெளியேற்றத் துடிக்கும் ஜாதிக் கூட்டத்தையும், ஒன்றாக அமர வைத்து, உண்மையைக் காட்டும் வகையில் கட்டப் பஞ்சாயத்து செய்து, வெற்றி கண்டுள்ளார் நூலாசிரியர்.
சைவ சமயத் துதிப்பாளர், எதிர்ப்பாளர் இருவர் கையிலும் இருக்க வேண்டிய அதி அற்புத சட்ட நூல் இது!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us