அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 480.)
அம்மன் சத்தியநாதன், ராகவேந்திர சுவாமிகளின் அருட்சரிதம் மற்றும் அவர் நிகழ்த்திய அருளிச் செயல்கள் பற்றி, வரலாற்று ஆதாரங்களுடன் முன்பே ஆறு பாகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இது ஏழாம் பாகம்.
திருப்பதி வேங்கடவன் கோவில் பின்னணியில், மகான் ஸ்ரீராகவேந்திரர் வீணை வாசிக்கும் அழகிய அட்டைப் படத்துடன் இந்த நூல் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு ஆண்டு காலம் முயன்று, ராக வேந்திரர் தொடர்புடைய பல இடங்களுக்கும் யாத்திரை செய்து, நிறைய திருத்தலங்களைத் தரிசித்துப் பல ஆதார நூல்களை வாசித்து, 54 உயரிய தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி, இந்த அரிய நூலை உருவாக்கியுள்ளார்.
ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள் சம்பந்தப் பட்ட அழகிய காட்சிகளை விளக்கும் "சில்பி' பாணி ஓவியங்கள் பலவற்றை ஓவியர் சசி.கே வரைந்துள்ளது நூலுக்கு அழகு சேர்க்கிறது.