அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக மலர் ஈழநாட்டில் இருந்து வந்தவர்கள் அமைத்த திருக்கோயில் இது. மக்களுக்கு நிம்மதி தருவது மட்டும் இன்றி, வாழ்க்கையில் பல அனுகூலங்கள் கைகூடுவதாக இந்தக் கோவில் நிறுவனர் நாகேந்திரன் சீவரத்தினம் எழுதியுள்ளார்.
அழகான வண்ண அச்சில் சிறந்த கட்டுரைகள் கொண்ட இந்த மலரில், யாழ்நகர் நிகரில்லாத நாவலர் குறித்து தூத்துக்குடி பேராசிரியர் சண்முகவேல் எழுதிய கட்டுரையில், நாவலர் தோன்றியிருக்காவிட்டால், யாழ்ப்பாணமும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் கிறிஸ்தவ நாடாகவே மாறியிருக்கும் என்ற தகவல் பதிவாகியிருக்கிறது. கும்பாபிஷேக மலர் என்பதைவிட சிறந்த இலக்கியமாக மலர்ந்திருக்கிறது.