புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசன்ட் ரோடு, (எத்திராஜ் கல்லூரி பின்புறம்) எழும்பூர், சென்னை- 600 008. (பக்கம்: 208)
கல்வியியலில் தமிழகத்தில் பெண் கல்வி பற்றிய ஆய்வு நூல். பறவைப் பார்வையும் பருந்துப் பார்வையுமாக ஐந்து இயல்கள் கல்விச் சிந்தனையை விரிக்கின்றன."சென்னை ஆவணக் காப்பகத்தின் பழங்குறிப்புக்கள் அமைத்துத் தந்த பாதச்சுவடுகள் வழியே நடைபயின்று வந்திருக்கிறேன்' என்று கூறும் ஆசிரியர், நடப்பதற்கு அரிய அந்தப் பாதையில் வாசகர்களை மிகுந்த பொறுப்புடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அறிய வேண்டியவற்றை அக்கறையுடன் அறியச் செய்திருக்கிறார்."ஆண் - பெண் வேறுபாடே இயற்கை அமைத்துத் தந்த பால்நிலை வேறுபாடேயன்றிச் சிந்தனை நிலையில், செயல் நிலையில் வேறுபாடு இல்லை என்பது தான் பெண்ணியம்' என முடிவிலும் வரையறை செய்யும் ஆசிரியர் மேலாய்வுக் களங்கள் பலவற்றுக்கு வாயில் திறந்துள்ளார்.பாடநூலாகக் கூடிய தகுதியுடன் கல்வியியல் துறைக்குக் கிடைத்துள்ள ஆதாரத் தகவு நூல் இது.