கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
பவர் பாயின்ட் யாருக்குத் தேவைப்படும்? மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், எல்.ஐ.சி., முகவர்கள், பேச்சாளர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள் குறிப்பட்ட தேவைகளுக்காகப் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவார்கள். மாணவர்கள், தஙகள் பள்ளி, கல்லூரி ப்ராஜெக்ட்களுக்காகவும், போட்டிகளுக்காகவும் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவர். மருத்துவர்கள், தாங்கள் பங்கு பெறும் கருத்தரங்குகளில் தங்களது உரையை பவர்பாயின்ட் மூலம் அளிப்பதனால் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்க முடியும். தேவையான படங்கள், மருத்துவ உபகரணங்களின் புகைப்படங்கள் போன்றவற்றை பவர்பாரயின்ட்டில் இணைத்து உதாரணங்கள் காட்ட முடியும். பவர் பாயின்ட் ஸ்லைடுகளில் தமிழில் தகவல்களை இடம் பெறச் செய்ய முடியும். எனவே மொழி ஒரு தடையாக இருக்க முடியாது. இதே போலத் தயாரிக்கப்பட்ட பவர்பாயின்ட் பிரசன்டேஷன்களை எளிதாக ஒரு சிடியில் பதிவு செய்து யாருக்கும் கொடுத்தனுப்பலாம். உங்கள் கம்ப்யூட்டரை பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரின் பயன்பாட்டை அதிகரிக்கப் போகிறீர்கள். ஏற்கனவே நீங்கள் செய்துள்ள ஒரு முதலீட்டின் மேல் புதிய பயன் பெற முடியும்.