ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.)
தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.