விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-640 001. (பக்கம்: 184).
சந்தைப்படுத்துதலின் அடிப்படை அம்சங்கள், பொருள் - மக்கள் - விலை - விளம்பரம் - இடம் - பொதிவு - நுழைவு மற்றும் வெளியேறு நிலை மற்றும் சந்தைச் செய்திகள், ஆளுமை என்று 12 தனித்தனி தலைப்புகளில் மிகக் கோர்வையாக ஆசிரியர் தொகுத்துள்ளார்.முதன்நிலை அறிமுகம் (பக்.33), வாடிக்கையாளரின் முழு மன நிறைவு (பக்.43), மக்களைப் பற்றிய சிந்தனை (பக்.53), விலையை நிர்ணயிக்கும் முறை (பக்.69), விளம்பரத்திற்கு ஏற்க வேண்டிய முடிவுகள் (பக்.87) போன்ற கருத்து வெளிப்பாடுகள் ஆசிரியரின் அனுபவம் தோய்ந்த அணுகுமுறையை வெளிக்காட்டுகின்றன.சாதனை குவிக்க நினைக்கும் சந்தைக்காரர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி.