நூலாசிரியர்கள்: ஏ.வி.ரங்கராஜு, எஸ்.அருணாசலம்.தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை-98. போன்: 2625 1968. (பக்கம்: 228).
இன்றைய வணிக உலகம் ஒப்பந்த அச்சில் தான் ஓடுகிறது என்றால் மிகையாகாது. விற்பவர் - வாங்குபவர், தொழிலாளர், தொழிலாளி, வீடு கட்டுபவர் - பொறியியல் ஒப்பந்தக்காரர் என்று பலவகைக் கோணங்களில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை கேள்வி - பதில் முறையிலும் குறிப்புகளாகவும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் சிக்கலுற்றால் நடுவர் நியமனம், குறித்த நேரத்தில் பொருட்களைத் தருவித்தல், ஒப்பந்த முறிவு, முறிவு நட்ட ஈடு என்று தனித்தனி தலைப்புகளில் ஆசிரியர்கள் அறிய வேண்டிய விஷயங்களை ஆங்கிலத்தில் அளித்துள்ளனர்.டெண்டர் தொடர்பான விஷயங்கள் (பக்-8 -22) வங்கி அளிக்கும் கியாரண்டிகளில் சுப்ரீம் கோர்ட் தீர்மானித்தவை (பக்.67) போன்றவை முக்கியமான தகவல்கள். வீடு கட்டுபவரோ அல்லது அதற்கு ஒப்பந்தப்படுபவரோ, பொறியியல் ஒப்பந்தக்காரரோ அல்லது துணை ஒப்பந்தக்காரரோ, சட்ட ரீதியாக ஒப்பந்தம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ரத்தினச் சுருக்கமாக எளிமையாக தெளிவாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. கல்லூரியில் சட்டம் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்