அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்.208).
தற்காலச் சிறைச்சாலைகளில், அதிகாரிகளின் ஆசிகளுடன் தாதாக்கள் கோலோச்சி வருவதையும், "ராஜ மரியாதைகள்' யாவற்றையும் அனுபவித்து வருவதையும் நாளேடுகள் வாயிலாக நாம் நன்கு அறிவோம். மாறாக, கொடுங்கோல் ஆட்சியாளர்களால், விடுதலைப் போராளிகளும், தியாகச் செம்மல்களும் சிறைகளில் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு வெந்து, சாம்பலானவர்களும், உயிர் நீத்தவர்களும் கணக்கில் அடங்கா. இந்தச் சிறியதோர் நூலில் 30 கட்டுரைகள் வாயிலாக, சரித்திரம் சுட்டிக்காட்டிடும், வீர தீரச் செயல்கள் புரிந்த மாவீரர்களை நாம் சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறோம். சுவைமிகு செய்திகளில் சில. இரட்டை ஆயுள் தண்டனையை ஏற்று வ.உ.சி.,யும், பத்தாண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்ற சக தேச பக்தர் சிவாவும், வெள்ளைக்கார நீதிபதியைப் பார்த்து அலட்சியமாகப் புன்முறுவல் பூத்தனராம் (பக்.16).நெஞ்சம் மறக்க இயலாத வீர - தீரர்களின் வரலாற்றுப் பெட்டகம் இந்நூல்.