முகப்பு » இலக்கியம் » கம்ப ராமாயணத்தில்

கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்

விலைரூ.60

ஆசிரியர் : முனைவர் தெ.ஞானசுந்தரம்

வெளியீடு: வனிதா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நதர், சென்னை-17. (பக்கம்: 192.)

இது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் சென்னை கம்பன் கழகத்திலும் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவுகளின் நூல் வடிவம். நூலாசிரியர் கம்ப ராமாயணத்தில் தேர்ந்த பயிற்சி உள்ளவர். கம்பன் கழகம் கொண்டு வந்த கம்ப ராமாயணப் பதிப்பில் பங்காற்றியவர். அந்தப் பதிப்பிற்கான அடிக்குறிப்புகளை எழுதியவர். கம்ப ராமாயண வகுப்புகள் எடுத்தவர். கம்ப ராமாயணத்தின் தனிச்சிறப்புகளைத் தெளிவாக உணரும் பொருட்டும், உரைக்கும் பொருட்டும் வான்மீகி இராமாயணத்தையும் நுட்பமாக கற்றறிந்திருக்கிறார் என்பது இவ்விரண்டு பெருநூல்களையும் தனது இந்நூலில் அவர் உறழ்ந்து காட்டும்போது புலனாகிறது.

பொதுவில் இராமாயணத்தின் மையச் செய்திகளாகப் பிறன்மனை நயவாமை, அறத்தின் வெற்றி ஆகியவையே முன்வைக்கப்படுகின்றன. இவற்றோடு உலக உடன்பிறப்பாண்மை என்ற ஒன்றையும் கம்ப ராமாயணம் வலியுறுத்துவதாக ஆசிரியர் முன்வைக்கிறார். ராமனைச் ஜாதி, இன, பொருளாதார வேற்றுமைகளைக் கடந்து எல்லாரையும் உடன்பிறப்பாளர்களாக ஏற்கும் ஒப்பற்ற மனிதனாகக் காட்டுவது தான் கம்ப ராமாயணத்தின் சிறப்பு என்பது ஆசிரியர் கூற்று.

இராமனும் அவன் உடன்பிறப்பாளர்களும், இராவணனும் அவன் உடன்பிறப்பாளர்களும், வாலியும் சுக்கிரீவனும், சடாயுவும் சம்பாதியும் என்று இராமாயணம் என்பது உன்பிறப்பாளர்களின் கதையாகவே உள்ளது என்று கூறுவதன் மூலம் இராமாயணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார் நூலாசிரியர். ஆனால், கருத்து வேறுபாட்டுக்கு இடம் தராமல் வாழ்ந்த உடன்பிறப்பாளர்கள் என்போர் தயரதனின் மக்கள் நால்வர் மட்டுமே (அவர்களோடு சடாயு - சம்பாதியும்). அதோடு அல்லாமல் பிற குடிப் பிறப்பாளர்களையும் உடன்பிறப்பாளர்களாகவே கருதினான் இராமன் என்பது அவனது தகைமை. இராமனுக்குத் தானே விழைந்து அருந்தொண்டு செய்தவன் இலக்குவன் (தாயாய்த் தந்தையாய்த் தவமாய்ச் சேயாய்த் தம்பியாய் என்று எல்லாமாக நின்றவன்);இ ராமன் விழைந்த அருந்தொண்டினை செய்தவன் பரதன் (பரதன் ஆற்ற வேண்டும் என்று இராமன் விழைந்த தொண்டு அரசை ஏற்று நடத்துதல்); இராமனின் அடியார்க்கு அவர் விழைந்த தொண்டு செய்தவன் சத்துருக்கனன் (இராமனின் அடியான் பரதன். அவனுக்கு அன்பின் அடிமை பூண்டு அவன் விழைந்த தொண்டுகளைச் செய்தான்) என்று எடுத்துக்காட்டி, அதை வைணவ மரபிலான `பகவத் கைங்கர்யம், பகவத் பாரதந்தர்ய கைங்கர்யம், பாகவத பாரதந்தர்ய கைங்கர்யம்' என்பவற்றோடு பொருத்திக் காட்டுகிற இடம் கவர்வதாக அமைந்திருக்கிறது. ராமன் தன் உடன்பிறப்பாளர்களாக உவந்த குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகியோரை ராமனுக்குத் தம்பியர் என்று கொள்ளும் வழக்கம் எப்படியோ தோன்றியுள்ளது; ஆயினும் இதற்குக் கம்பர் வழங்கும் அகச்சான்றுகள் ஏதும் இல்லாத நிலையில் இவர்கள் தம்பியரா, தமையன்மாரா என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு கம்ப ராமாயணத்துக்குள் விடை தேடுகிறார் ஆசிரியர். தக்க சான்றுகளுடன் அவர்கள் தம்பியர் அல்லர் தமையன்மாரே என்று நிறுவுகிறார்.

இலக்குவன் இளைய பெருமாள் என்று அறியப்படுகிறான். இலக்குவனைப் போலத் தொண்டு செய்த குகன் குகப் பெருமாள் என்று அறியப்படுகிறான். ராமனின் அடிசூடி அரசாண்ட பரதன் பரதாழ்வான் என்று அறியப்படுகிறான். பரதனைப் போலவே, இலங்கைக்கு அரசனாக முடிசூட்டப்பட்ட வீடணன் மணிமுடிக்கு மாற்றாக ராமனின் அடிசூடி அரசாண்டான் ஆகையால் வீடணாழ்வான் என்று அறியப்படுகிறான் என்று தமையன்மாருக்கும் தம்பியருக்கும் ஒப்புமை காட்டி நடுநாயகனாக ராமனை அமைத்துக் காட்டுவது நயமாக இருக்கிறது. வைணவ மரபில் ஆசிரியர் பெற்றிருக்கும் தேர்ச்சியே இந்த வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us