முகப்பு » இலக்கியம் » புதுப்பார்வைகளில்

புதுப்பார்வைகளில் புறநானூறு

விலைரூ.150

ஆசிரியர் : ப.மருதநாயகம்

வெளியீடு: காவ்யா

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24. (பக்கம்: 288,)

ஆங்கிலம், தமிழில், ஆழ்ந்த புலமையுள்ள முனைவர் ப.மருதநாயகம், உலகறிந்த மொழித்திறன் அறிஞர். அவரது புறநானூறு பற்றிய ஆழமான இந்த நூலில் பல புதிய சிந்தனைகளை, ஆய்வுத் தமிழுக்கு விருந்தாகத் தந்துள்ளார்.

பிசிராந்தையார் அன்னப்பறவையைத் தூது அனுப்பிய புறப்பாடலே தூது இலக்கியம் தோன்ற விதையாய் அமைந்ததால் தான் காளிதாசனின் வடமொழியில் மேகதூதம் எழுதினான். 14ம் நூற்றாண்டில் மலையாள மணிப்பிரபாளத்தில் கோக சந்தேசம், காச சந்தேசம் தோன்ற, மேக சந்தேசமே காரணம் என்ற பன்மொழி ஆய்வின் முடிவை பளிச்சென வெளியிட்டுள்ளார்.

`நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர், என்பு படு சுடலை வெண்நீறு அவிப்ப' என்ற 356 புறப்பாடலில், காதலர் கண்ணீரால், இடுகாட்டுச் சாம்பல் அவியும் நிலையாமைக் கருத்தை, எமர்சன் கவிதையுடனும், விஷ்ணு புராண சுலோகத்தோடும் ஒப்பிட்டு, புறநானூற்றின் உலகத் தரத்தை, நிலையாமை வழி நெஞ்சில் நிலைக்க வைக்கிறார்.

தூது, பரணி, பள்ளியெழுச்சிக்கு புறநானூறு அடிப்படை வகுப்பதை தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

தொன்மை இலக்கியத்திலிருந்து பெற்ற தோற்றங்களை `தொன்மத் திறனாய்வு' என்னும் தலைப்பில் ஆய்ந்து கூற்றுவன் பற்றிய பல கூற்றுகளைத் தருகிறார்.

முதுமையிலும் நரையில்லா இளமைக்குக் காரணம் நற்பண்பு மனைவி, அறிவு குழந்தைகள், சிறந்த வேலையாட்கள், செங்கோல் அரசன், பண்பு நிறைந்த ஊரார் என்ற ஐவருமே கவலை போக்கியதால், தலையில் நரையில்லை என்கிறார் பிசிராந்தையார்.

மேலைநாட்டு அறிவியல் அணுகுமுறையில் புறநானூற்றை ஆய்ந்தால் பல நீதிகள் வெளிப்படையாக மின்னல் போலத் தெரிகின்றன. இதோ சில: `ஈவதே அறம்' செல்வத்தின் பயன் ஈதலே, இன்னாதது உலகம், அதனை இனிதாகக் காண்க, நல்லவர் வழியே நாடே செல்லும்!

அமெரிக்கா, கனடா, பிரான்சு நாடுகளில் தோன்றி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பெண்ணிய நோக்கில் புறநானூற்றை ஆய்கிறார்.

ஆங்கிலத்தில் புறநானூற்றை மொழிபெயர்த்த ஜி.யூ.போப், ஏ.கே.ராமானுஜன், ஜார்ஜ் ஹார்ட் ஆகியோரதுTamil Heroic Poems, Poems of Love and War, The Four Hundred Poems of War and WisdÓm ஆகிய நூல்களை ஒப்பிட்டு திறனாய்வு செய்து, உலகத்தரமிக்க புறநானூற்றை உயர்த்திப் பிடித்துள்ளார். செம்மொழித் தமிழுக்கு அணி செய்யும், பழமையில் புதுமை காணும் இனிமை நூல்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us