உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113. (பக்கம்: 168.)
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. மறைவுக்குப் பின்னும் தமிழறிஞர்கள் ஒளிவீசுகின்றனர். சாதாரண எழுத்தராய் வாழ்வைத் தொடங்கி உழைத்து 33 ஆண்டில் சார் பதிவாளராகி, ராவ் பகதூர், ராவ்சாகிப் பட்டம் பெற்று உயர்ந்தார். ஓய்வு பெற்றும் 33 ஆண்டுகள் சிறந்த உரையாசிரி யராய், பதிப்பாசிரி யராய், பக்திப் பாடல் புனையும் பாவலராய், சொற்பொழிவாளராய், மொழி பெயர்ப்பாளராய், 40 நூல்கள் எழுதித் தந்த தமிழ்ப் பேரறிஞர் செங்கல்வராயப் பள்ளை.
தணிகை முருகனை இறுதி மூ ச்சு உள்ள வரை மறவாது விளங்கி, அருள் பெற்ற இவரது வாழ்வும், இலக்கியக் கொடைகளும், ஆய்வுப் பதிப்புகளும், திருப்புகழ் 12 திருமுறை விளக்கங்களும் இந்த நூலில் ஆறு அறிஞர்களால் அழகுற விளக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வின் மரணப் படுக்கையில் அவரை பிள்ளையவர் தரி சிக்கச் சென்றார். திருப்புகழை ஆராய்ந்த திருக்கரங்கள் இவை தானே என்று இவரது இருகரங்களையும் உ.வே.சா., கண்ணில் ஒற்றிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரி ந்தார். சங்கத் தமிழைத் தேடி அலைந்த திருப்பாதங்கள் இவைதானே என்று உ.வே.சா.,வின் பாதங்களைத் தொட்டு பிள்ளை வணங்கிப் பரவசமுற்றார். இதுபோல பல அற்புதச் செய்திகளை இந்த நூல் தாங்கி நிற்கிறது. தெய்வத் தமிழை உயர்த்திய சான்றோர்களை இதுபோல நூலாக்குவது காலத்தால் அழியாத கொடையாகும்.