நூலாசிரியர்: கல்லிடைக்குறிச்சி வைணீக வித்வான்கள் ஏ.சுந்தரமய்யர், எஸ்.வேங்கடேசன். தமிழாக்கம்: டாக்டர் ஆர்.தியாகராஜன். வெளியீடு: மியூசிக் புக்ஸ் பப்ளிஷர்ஸ், பு.எண்.4 (ப.எண்.51), மேல் மாடி, அலர்மேலுமங்காபுரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:௧௪௦).
* கர்நாடக சங்கீதம் பயின்று வருபவர்களுக்கும், சொல்லித் தருபவர்களுக்கும் நன்கு அறிமுகமான இந்நூலாசிரியர்கள். ஸ்ரீதீட்சித கீர்த்தனமாலா எனும் வரிசையில், வெளியிட்டுள்ள பதினொன்றாவது பாகம் இந்நூல். ஒன்பதாவது `ப்ரஹ்ம சக்ரத்தின்' ஆறு மேளகர்த்தா ராகங்களுக்கு, கீர்த்தனைகளுடன் பல புதிய, அபூர்வ ராகங்களில் அமைந்ததுமான மொத்தம் 33 கீர்த்தனைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. `ஷட்ராக மாலிகா' ஒன்றும், நோட்டு - ஸ்வரசாகித்யமாக அமைந்த ஐந்து சிறிய கீர்த்தனைகளும், ஷ்ரீ சுப்பராம தீட்சிதரின் மூன்று அருமையான கிருதிகளும் உள்ளன. கீர்த்தனைகளின் ராக லட்சணங்கள், வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம், கருத்துரைகள் யாவும் இசை பயிலுவோருக்கு பாவத்துடன் பாடப் பெரிதும் உதவிடும்.பிழையற்ற அச்சுப் பதிப்பு, தரமான தாள், கண் கவர் அட்டை இந்நூலின் பிற அணிகலன்கள்.சங்கீத வித்வான்களுக்கும், மாணாக்கர்களுக்கும் இனியதோர் பொக்கிஷம் இந்நூல்.