கொங்கு ஆய்வு மையம், 64/5, டி.பி.ஜி., காம்ப் ளெக்ஸ், ஈரோடு-638 011. (பக்கம்: 360.)
ஒரு நாட்டின் வரலாறும், ஒரு இனத்தின் வரலாறும், ஒரு சமுதாயத்தின் வரலாறும் அறிவதற்கு செப்பேடுகளும், ஓலைப் பட்டயங்களும் ஆவணங்களாக உதவுகின்றன. இந்நூலில் கொங்கு வேளாளர் தொடர்பான 76 ஆவணங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்நூலின் தொகுப்பாசிரியர், ஆவணங்களில் கூறப்படும் செய்திகளை முதலில் தெரிவித்து விட்டுப் பின்னர் மூல ஆவணத்தையும் அப்படியே கொடுத்துள்ளார். இது நூலின் செய்திக்கு ஆதாரமாக விளங்கி அழகு சேர்க்கிறது.கரிகாலனுக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டது குறித்தும் (பக்.33), சேர மன்னர் மாந்தரஞ்சேரல் கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தது குறித்தும் (பக்.61) சோழ நாடு விட்டுக் குடிபெயர்ந்த வேளாளர்கள் கொங்கு நாடு வந்தது குறித்தும் (பக்.80) கொங்கு நாட்டுப் புலவர்கள் வேளாளர்களிடம் வலக்கையால் பரிசு பெற்று மன்னரிடம் தம் இடக்கையை ஏந்தினர் என்றும் (பக்.124), சோழன் தன் அம்பினால் கம்பரை கொன்றார் என்றும் (பக்.149), காலிங்கராயர் கால்வாய் வெட்டியது குறித்தும் (பக்.180) இந்நூலில் ஆவணங்களின் உதவியுடன் தொகுப்பாசிரியர் கூறியுள்ளார்.கொங்கு வேளாளர் குலங்களின் அட்டவணையும் (பக்.16-27) செப்பேடுகள் ஓலைப் பட்டயங்கள் சிலவற்றின் புகைப்படங்களும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.வரலாற்று ஆவணமாக வந்துள்ள அருமையான நூல்.