வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 320.)
நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர்களான புஷ்பவனம் குப்புசாமியும், அவருடைய துணைவி அனிதா குப்புசாமியும் நாட்டுப்புறக் கதைகள் சொல்வதிலும் வல்லவர்கள் என்பது நாடறிந்த செய்தி. கிராமிய மணம் கமழும் கதைகள் பலவற்றைப் பழமொழிகளை விளக்கும் நோக்கில், இவர்கள் அரும்பாடு பட்டுச் சேகரித்து, எளிமையாகவும் சுவாரஸ்யம் குன்றாமலும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
பண்பையும், கலாசாரத்தையும், பழந்தமிழர் வாழ்வியல் சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து மகிழவும், கடைப்பிடித்து வாழ்ந்து சிறக்கவும் உதவும் இவ்வரிய செய்திகள் அச்சு வடிவில் பதிவாவது மிக மிக அவசியம் என்பதால், இந்த நூலுருவாக்கம் அமைந்துள்ளது. 55 தலைப்புகளில் அருஞ்சிறப்புமிக்க பழமொழி விளக்கக் கதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுவர்களை ஈர்க்கும் விதமாக கதை விளக்கப் படங்களும் நிறைய இடம் பெற்றுள்ளன.